Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதன் தசையின் காலம் எவ்வளவு? அதன் நன்மைகள் என்ன?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

புதன் தசையின் காலம் எவ்வளவு? அதன் நன்மைகள் என்ன?
, சனி, 19 செப்டம்பர் 2009 (14:53 IST)
புதன் தசையின் காலம் 17 ஆண்டுகள். புதன் தசையில் கிடைக்கும் நன்மைகளைப் பட்டியலிடும் முன்பாக சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு புதன் நல்ல நிலையில் இருக்கிறாரா? எனப் பார்க்க வேண்டும். என்ன ராசி, லக்னத்தில் பிறந்தவர் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

இதேபோல் எத்தனையாவது தசையாக சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு புதன் தசை வருகிறது என்பதையும் பார்க்க வேண்டும். ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் (4வது, 5வது, 6வது) ஒவ்வொரு பலன் உண்டு.

கல்வி, கேள்விகளுக்கு உரிய கிரகம் புதன். சபையில் பேசும் திறன், சமயோசித புத்தி ஆகியவற்றை கொடுக்கக் கூடியதும் புதன். அந்த புதன் ஒருவரது ஜாதகத்தில் தனாதிபதி, சுகாதிபதி, பாக்கியாதிபதிகளுடன் இணைந்திருந்தால் பணவரவு அபரிமிதமாக இருக்கும்.

வியாபாரத்தில் செல்வம் கொழிக்கும். முதல் தரமான வணிகம் (கப்பல் வணிகத்தில் துவங்கி), பங்குச்சந்தை ஆகியவற்றிற்கு உரியவரும் புதன்தான். அந்த புதன், ராகு/கேது அல்லது செவ்வாயுடன் சேர்ந்திருந்தால் மாரகத்திற்கு சமமான மோசமான பலன்களை ஏற்படுத்தும்.

புதன் நீச்சமாகி கேதுவுடன் சேர்ந்து சனியின் பார்வையில் இருந்தால் அந்த ஜாதகர் அவமானத்திற்கு உள்ளாவார். புதன் தசை காலத்தில் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும். இதனால் அதிகளவில் அவர்களுக்கு கவுன்சலிங் தேவைப்படுகிறது.

ஆனால், அதே புதன் யோகாதிபதிகளுடன் சேர்ந்திருந்தால் தொழிலதிபர் ஆகுதல், வர்த்தக சங்கத்தில் பெரிய பொறுப்புக்கு வருவது, பங்குச்சந்தையில் வருவாய் பெறுவது போன்றவையும் நிகழும்.

கவிதைகளில் புதுக்கவிதை புதனுடையது. ஆய்வுக் கட்டுரை, பழைய நூல்களுக்கு உரை எழுதுதல் ஆகியவையும் புதன் நன்றாக இருப்பவர்களுக்கு சாத்தியப்படும்.

Share this Story:

Follow Webdunia tamil